Friday, November 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

காலணியுடன் வராண்டாவில் நின்ற அன்வார் – மக்ரோன். மன்னிப்போம், மறப்போம் – இந்து மக்கள்!

கோலாலம்பூர், நவ 20
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மலேசியா வந்து இரண்டாவது நாள் நவ 17 மதியம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரை பெட்டாலிங் தெரு பாரம்பரிய வளையத்தில் 30 நிமிட நடை பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த நடைப்பயணத்தின்போது, குவாண்டி சீனக் கோயில் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் அருகே இருவரும் சிறிது நேரம் நின்றனர்.

வீடியோவில் இருவரும் காலணியுடன் கோயில் வாசலின் நிற்பது பதிவாகி சமூக வலைத்தளங்களில் வீடியோவில் இருவரும் காலணியுடன் கோயில் வாசலின் நிற்பது பதிவாகி சமூக வலைத்தளங்களில் face book ,TIK TOK, மற்றும்X -தளம் அதிகம் பகிரப்பட்டு கோயிலில் உள்ளே காலணியோடு போய்விட்டார் என்று வீடியோ காட்சிகள் வேகமாக பரவியது.

சமூக வலைத்தளங்களில், கோவில் நிர்வாகம் தான் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்று உறுதிப்படுத்தியது.
மத உணர்வுகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம். தலைவர்கள் உள்கருவறைக்குள் நுழையவில்லை.
அவர்கள் ராஜகோபுரத்தின் கீழே உள்ள முன் வராண்டாவில் மட்டுமே நின்றார்கள், பிரதான பிரார்த்தனை மண்டபத்திற்கோ சன்னிதானத்திற்கோ செல்லவில்லை.
காலணியுடன் யாரும் உள்கருவறைக்குள் நுழைய முடியாது அவர்கள் வெளிவராண்டாவில் நடந்து சென்றார்கள் அவ்வளவுதான் என்று தலைவர் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜாதெரிவித்தார்.

மேலும் இந்த வருகை முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்றும், அதிகாரிகளிடமிருந்து முன்னறிவிப்பு வரவில்லை என்றும் விளக்கமளித்தார்.

மலேசிய இந்து சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கேள்வி எழுப்பிய பிறகும் நிர்வாகம் “விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது ஏன் இது வைரலானது? திடீர் பாதுகாப்புப் படையினர் மற்றும் கேமராக்கள் குழு நடந்ததால் வீடியோ உடனே பரவியது.
மத இடம் – கோவிலில் காலனி என்பது மலேசியா, தமிழ்நாடு இரண்டிலும் உணர்வுபூர்வமான விஷயம் வெளிநாட்டு தலைவர் மக்ரோன் முதல் முறை மலேசியா வந்திருப்பதால், கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டது.
அன்வார் – மக்ரோன் நட்புப் பயணம் பெட்டாலிங் தெருவில் கைக்குலுக்கிய தமிழ், சீன, மலாய் கடைக்காரர்கள் இவைதான் நினைவில் நிற்க வேண்டியவை காலணி சர்ச்சை, முன்னறிவிப்பு இல்லாததால் வந்த சிறு தவறு தவறை சுட்டிக்காட்டியாயிற்று விளக்கம் வந்தாயிற்று.

இனி, VIP வருகை என்றால் கோவில்,பள்ளிவாசல்,ஆலயம் எதுவாக இருந்தாலும் 10 நிமிடம் முன் அழைப்பு எல்லைக்கோடு – இந்த முன் அறிவிப்பு மட்டும் கடைப்பிடித்தால் போதும் அதுவரை தாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

இந்து மதம் – நெறி, நெறியை விட மனம் வேதங்களில், இதிகாசங்களில் மீண்டும் மீண்டும் வரும் சொல் பண்பு –பொறுத்தல்,மன்னித்தல்.
திருக்குறளே சொல்கிறது
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல். (குறள் – 314)
தீங்கு செய்தவரை பழிவாங்காமல், அவர் வெட்கப்படும் படி நன்மை செய்து விடுவதே உயர்வு”

தவறு நடந்தாலும் நோக்கம் பார்க்கும் மரபு, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்தது வேண்டுமென்றே செய்த அவமதிப்பு இல்லை.
முன்னறிவிப்பு இல்லை, யாரும் வராண்டாவை தாண்டவில்லை, இந்து தர்மப்படி அறியாமல் நடந்த பிழைக்கு தண்டனை இல்லை, திருத்தம் தான் அதனால் தான் “மன்னிப்போம் மறப்போம்”

இந்து தர்ம மரபுப்படி,நல்லவர்கள் என்பது தவறே செய்யாதவர்கள் இல்லை தவறை மன்னிக்கும் மனம் உள்ளவர்கள்.

கோயில் என்பது கல் மட்டும் இல்லை, கருணை கற்றுத்தரும் இடம், அங்கே நின்ற இரண்டு தலைவர்களும் வெளி வராண்டாவோடு நின்று விட்டார்கள் என்று நிர்வாகம் தெளிவுபடுத்திய பிறகு, அதைப் பிடித்து தொங்குவது தர்மம் இல்லை.

அலை ஓசை வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

“இந்து மதம் சொல்லும் பெரிய பாடம் கோபத்தை விட கருணை பெரியது அதனால் தான் நாம் இந்த நிகழ்வை “கவனக்குறைவு” என்று எடுத்துக்கொண்டு மன்னிப்போம் மறப்போம் என்று முன்னே சொல்கிறோம்”
இது தான் நம் முன்னோர்கள் கற்றுத்தந்த “ தர்மம் ” தவறைச் சுட்டிக்காட்டு, விளக்கத்தை ஏற்றுக்கொள். மனதை இலகுவாக வைத்துக்கொள்வது நமது தர்மம்.

“மதத்தை மதிப்போம், மனிதநேயத்தைக் காப்போம், மன்னிக்கும் பண்பை வளர்ப்போம். ஒரு நிகழ்வை வைத்து நல்லிணக்கத்தைச் சிதைக்காமல், புரிதலோடும் பெருந்தன்மையோடும் கடந்து செல்வதே நமது பண்பாட்டின் அடையாளம். தவறுகள் நிகழலாம்; ஆனால் அவற்றை மன்னித்து மனித உறவுகளைக் காப்பதே உண்மையான தர்மம். கோபத்தைவிடக் கருணையும், விமர்சனத்தைவிடப் புரிதலும் மேலோங்கட்டும். இதுவே நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுத்தந்த உயரிய நெறி. எனவே, இந்த விவகாரத்தில் மன்னிப்போம், மறப்போம்; மத நல்லிணக்கத்துடன் தொடர்ந்து பயணிப்போம்” என மலேசிய மறுவாழ்வுச் சங்கத்தின் தேசியத் தலைவரும், அலை ஓசை மீடியா ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular