Thursday, November 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சுபாங்கிலிருந்து திருச்சிக்கு பாத்தேக் ஏர் நேரடி விமான சேவை!

சுபாங், நவ 19
சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து திருச்சி நகருக்கு பாத்தேக் ஏர் நேரடி விமான சேவையை தொடங்கவிருக்கிறது.
எதிர் வரும் 16 டிசம்பர் 2026 முதல் வாரத்திற்கு 3 நாட்களுக்கு இந்த நேரடி விமான சேவை தொடங்கவுள்ளது.
திருச்சி நகருக்கான இந்த நேரடி விமான சேவை திங்கள், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் மேற்கொள்ளப்படும்.
சுபாங்கிருந்து காலை 09.30-க்கு புறப்படும்
OD 843 குறியீட்டு விமானம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை சென்றடையும்.
பிறகு இந்திய நேரப்படி காலை 12.35 மணிக்கு புறப்படும்
OD 844 குறியீட்டு விமானம் இரவு 7.05 சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தை வந்தடையும்.
தமிழ்நாட்டுக்கு பயணத்தை மேற்கொள்ள விரும்பும் கிள்ளான் பள்ளத்தாக்கு இந்தியர்களுக்கு இது ஒரு அறிய அற்புதமான வாய்ப்பாக அமையும்.
நேரத்தையும் பயண நெரிசலை தவிர்க்கவிருக்க விரும்பும் மக்கள் இந்த புதிய நேரடி விமான சேவையை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular