
புத்ரா ஜெயா அக் 9
இந்தியர்களிடையே செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI திறன்களை மேம்படுத்துவதுடன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், உலகத் தமிழ் வர்த்தக சங்கம்
(WTCC) ஆதரவுடன்
Teceze Digital Innovation & Excellence நிறுவனம் இணைந்து முன்னெடுக்க உள்ள
AI பயிற்சித் திட்டம் தொடர்பில் நேற்று தமது அலுவலகத்தில் சிறப்பு சந்திப்பு நடைபெற்றதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.
உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC)-யின் தலைவர் செல்வகுமார், Teceze Digital Innovation & Excellence நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில் குமார் மற்றும் நிறுவன இயக்குநர் தினேஷ் ஆகியோருடன் அந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, மலேசியாவில், Teceze Digital Innovation & Excellence நிறுவனம் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அவர்களின் ஆலோசனை வரவேற்கதக்கது.
இதன் மூலம் இந்தியர்களிடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த பகுத்தறிவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சித் திட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
குறிப்பாக, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் துறையில் உள்ளவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் AI தொடர்பான பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த இந்தியர்களும் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்று, தங்களது துறைகளில் AI தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.
தற்போதைய காலக்கட்டத்தில், AI தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதற்கேற்ப இந்தியர்களின் திறன்களை மேம்படுத்தி, எதிர்கால வேலைச் சந்தையில் அவர்கள் போட்டித்தன்மையுடன் திகழ்வதற்கு இந்தப் பயிற்சிகள் உதவும்.
மேலும், இந்த திட்டங்களின் வாயிலாக, 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AI மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பங்களில் திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்குவதன் மூலம், இந்திய சமூகத்திற்கான முதலீட்டு மற்றும் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்ய முடியும் என்பதை இந்த சந்திப்பின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இதனிடையே, இந்த பயிற்சித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இந்தியர்களுக்கு, internship எனப்படும் வேலை பயிற்சித் திட்டம் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கவும் Teceze Digital Innovation & Excellence நிறுவனம் தயாராக உள்ளது.
எனவே, MADANI அரசாங்கம், AI சார்ந்த துறைகளில் இந்திய சமூகத்தின் தேவைகளை அறிந்து, அவர்களின் திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதில் உறுதி.எனவே மடானி அரசாங்கம் AI சார்ந்த துறைகளில் இந்திய சமூகத்தின் தேவைகளை அறிந்து அவர்களின் திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதில் உறுதி என யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.


