
லுமுட் , செப்11
இந்திய கடற்படையின் செயல்பாட்டு நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாக, INS மைசூர் 09 செப்டம்பர் 2026 அன்று மலேசியாவின் லுமுட் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படைக்கும் மலேசிய அரச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் பயிற்சியான‘சமுத்ர லக்ஷ்மணா’ (Samudra Laksamana)-வின் 4வது பதிப்பில் பங்கேற்பதே இதன் நோக்கமாகும்.
கப்பலும் அதன் வீரர்களும் மலேசிய அரச கடற்படை அதிகாரிகள் மற்றும் மலேசியாவிலுள்ள இந்திய உயர் ஆணைய அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.
சமுத்ர லக்ஷ்மணா பயிற்சியில் துறைமுகத்திலும் கடலிலும் நடைபெறும் தொழில்முறை நடவடிக்கைகள் இடம்பெறும். இதில்:
- இரு கடற்படைகளின் கப்பல்களுக்கு இடையிலான Cross-deck visits
- செயல்பாட்டு மற்றும் தொழில்முறை கலந்துரையாடல்கள்ற்படை வீரர்களுக்கும் தங்களது தொழில்முறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள
- விளையாட்டு மற்றும் சமூக நடவடிக்கைகள்
ஆகியவை அடங்கும்.
இந்நடவடிக்கைகள் இரு நாடுகளின் கடற்படை வீரர்களுக்கும் தங்களது தொழில்முறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்திறனை (interoperability)மேம்படுத்தவும், பரஸ்பர புரிதலை வலுப்படுத்தவும் வாய்ப்பளிக்கும்.
2026 ஜூலை 1 அன்று நடைபெற்ற 12வது இந்தியா–மலேசியா துணைக் குழுக் கூட்டம்உள்ளிட்ட சமீபத்திய இருதரப்பு நடவடிக்கைகளால் உருவான முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தக் கப்பல் பயணம் அமைந்துள்ளது.
இந்தப் பயணம் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கடல்சார் கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதுடன், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விரிவாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
இரு நாடுகளுக்கிடையிலான கடல்சார் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கும், தொழில்முறை பரிமாற்றங்களை வலுப்படுத்துவதற்கும் இந்தப் பயணம் மற்றொரு முக்கியமான படியாகும்.
மேலும், இந்த நடவடிக்கை இந்திய அரசின்‘MAHASAGAR’ தொலைநோக்குப் பார்வை மற்றும்‘ASEAN–India Year of Maritime Cooperation 2026’ ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.



