
புத்திக்-கிளந்தான் ,செப் 7
பாஸ் கட்சியின் 72 ஆவது பேராளர்கள் மாநாட்டில் கட்சியின் தலைவர் ஹாடி அவாங்கின் கொள்கை உரையை பாஸ் ஆதரவு பேரவை முழுமையாக ஆதரிப்பதாக அந்த பேரவையின் பிரதிநிதி அலேக்ஸ் சான் பு யுவ் கூறினார்.
‘இஸ்லாமியத் தீர்வு வெற்றியை நிரப்புகிறது’ என்ற கருப்பொருள் கட்சியின் தலைவர் ஆற்றிய கொள்கை உரை மிகவும் பொருத்தமான ஒன்று என்றார் அவர்.
பாஸ் ஆதரவு பேரவையை பொறுத்த வரை இந்தக் கருப்பொருள் மிகப் பெரிய பொறுப்பை உள்ளடக்கியதாகும்.
ஏனெனில் வெற்றி என்பது நாம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றும் என்பதைக் குறிக்கும் எண்ணிக்கை மட்டுமல்ல.
அதைவிட முக்கியமான கேள்வி என்னவென்றால், நமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் இஸ்லாமியர்களும் இஸ்லாமியர் அல்லாதவர்களும் உட்பட்ட ஒட்டுமொத்த மலேசிய மக்களும் அந்த ஆட்சியின் பயனை எவ்வாறு உணர்வார்கள்?
பாஸ் தலைவர் வலியுறுத்தி உள்ளபடி வெற்றி என்பது நலன்புரி, நேர்மை மற்றும் அனைவருக்கும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
நலன்புரி நாடு என்பது வெறுமனே பொருளாதார உதவிகளை வழங்குவது அல்ல. அது பொருளாதார வளர்ச்சியையும் மனித வள மேம்பாட்டையும் இணைத்து அனைவருக்கும் நீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி வை உருவாக்குவதாகும்.
இந்நாட்டில் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தினர் இதைத்தான் காண விரும்புகின்றனர்.
அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை விரும்புகிறார்கள்.
அதனால் தான் இஸ்லாமிய தீர்வு என்பது வெறுமனே பேசப்படுவது மட்டுமல்லாமல் மக்களால் பார்க்கக் கூடியதாகவும் உணரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
இன்னும் பாராமல் ஏழைகளுக்கு உதவினால்-அதுவே நலன்புரி.
வணிகர்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட்டால்-அதுவே நீதி.
மதத்தைப் பொருட்படுத்தாமல் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டால்-அதுவே இஸ்லாத்தின் அருள்.
பாஸ் தலைவர் தமதுரையில் மனித வள மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார்.
ஒவ்வொரு மதமும் கலாச்சாரமும் குடும்பம், கல்வி, நல்லொழுக்கம், அமைதி மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை மதிக்கின்றன.
எனவே பாஸ் ஆதரவு பேரவையின், கட்சியின் தலைமைத்துவம் முன்னெடுக்கும் இஸ்லாம் என்பது வெறுமனே ஒரு நாட்டை உருவாக்குவதற்கான கொள்கை அல்ல, மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரு கொள்கை என்பது கொண்டு செல்வதாகும்.
பாஸ் ஆதரவு பேரவை
Wawasan Induk Negara Sejahtera 2051-WINS 2051 திட்டத்தையும் வரவேற்கிறது என அவர் சுட்டிக் காட்டினார்.
பாஸ் ஆதரவு பேரவை பாஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கட்சியின் தலைமைத்துவம் முன்னெடுக்கும் அனைத்து கொள்கைகள் மட்டும் திட்டங்களுக்கு தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


