Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாத்தேக் ஏர் 35% வரை தள்ளுபடியுடன் நெகிழ்வான பயணத்தை மேலும் எளிதாக்குகிறது!

பாத்தேக் ஏர் தனது எகானமி வேல்யூ மற்றும் ஃபிளெக்ஸி கட்டணங்களில் 35% வரை தள்ளுபடி வழங்குவதன் மூலம், பயணிகள் முன்கூட்டியே தங்களின் பயணங்களை திட்டமிடுவதை எளிதாக்குகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் பயணிகள் ஒரு பயணத்தை முன் பதிவு செய்யும்போது பெரிதும் விரும்பப்படும் நெகிழ்வுத் தன்மை மற்றும் வசதியுடன் குறிப்பிடத்தக்க சேமிப்பையும் ஒன்றிணைக்கிறது.
பாத்தேக் ஏரின் இந்த சலுகை இப்போதிலிருந்து 30 ஏப்ரல் 2026 இவரை முன் பதிவு செய்ய கிடைக்கிறது.
இதன் மூலம் பயணிகள் 31 ஜனவரி 2027 வரை பயணிக்கலாம்.
பயணிகள் விழியை மட்டும் பார்க்காமல் தங்கள் பயணங்களில் விருப்பத் தேர்வுகள் மற்றும் கட்டுப்பாட்டை கொண்டிருப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நேரத்தில் இந்த சலுகை பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
பாத்தேக் ஏர் எகானமி வேல்யூ மற்றும் ஃபிளெக்ஸி கட்டணங்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இதில் இரண்டு விருப்பங்களில் இலவச தேதி மாற்றங்கள் அடங்கும்-வேல்யூவிற்கு ஒரு முறையும் பிளெக்ஸிக்கு வரம்பற்ற முறையும்
(கட்டண வேறுபாடு பொருந்தும்), தேவைப்படும்போது பயணத்தை மாற்றி அமைக்கும் சலுகையை பாத்தேக் ஏர் வழங்குகிறது.
மேலும் பயணிகள் 25 கிலோ வரை பயணப்பெட்டிகளை எடுத்துச் செல்ல சலுகைகள் வழங்கப்படுகிறது.
பயணிகள் புறப்படுவது முதல் தங்கள் தேர்வு நகர்களுக்கு சென்றடைவது வரை அதிக எளிமையை அளித்து, ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது.
இந்த சலுகையானது சிட்னி,ஷொங்காய்,பாலி,புக்கெட், கொழும்பு, பேங்காக்,புது டெல்லி உட்பட பரந்த அளவிலான வழித்தடங்களை உள்ளடக்கியுள்ளது.
இது பயணிகளுக்கு அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை மட்டும் அல்லாமல், எவ்வாறு பயணிக்க விரும்புகிறார்கள் என்பதையும் தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத் தன்மையை பயணிகளுக்கு வழங்குகிறது.
பயணம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால், உறுதியையும் நெகிழ்வுத் தன்மையையும் வழங்கும் கட்டணங்களை நோக்கிய ஒரு தெளிவான நகர்வு உள்ளது.
தனது வேல்யூ மற்றும் ஃபிளெக்ஸி விருப்பங்களை மேலும் எளிதில் அணுகக் கூடியதாக மாற்றுவதன் மூலம், நம்பிக்கையுடன் முன்கூட்டியே திட்டமிட விரும்பும் பயணிகளுக்கு பாத்தேக் ஏர் தொடர்ந்து ஆதரவளிக்கிறது.
இந்த சலுகையை பயணிகள் காலதாமதமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கும் உங்களின் அடுத்த பயணத்தை திட்டமிடவும் Batik Air மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது www.batikair.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular