Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தனது 24-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் அனைத்து இருக்கைகளுக்கும் 24% கழிவை ஏர் ஆசியா வழங்குகிறது!

உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தனது 24 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து விமான பயணங்களுக்கும் 24 விழுக்காடு கழிவை ஏர் ஆசியா வழங்குகிறது.
இரண்டு விமானங்களை மட்டுமே கொண்டு அடக்கமாக தனது பயணத்தை தொடங்கிய ஏர் ஆசியா, இன்று உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக ஏர் ஆசியா விளங்குகிறது.
தனது நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பாராட்டும் வகையில், இந்த சிறப்பு கட்டண விற்பனை நேற்று முன்தினம் தொடங்கி எதிர் வரும் 7 டிசம்பர் 2025 வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த சிறப்பு கழிவு கட்டணத்தில் எதிர் வரும் 6 ஜனவரி 2026 முதல் 30 நவம்பர் 2026 வரை பயணிகள் பயணிக்கலாம்.
பயணிகள் airasia.com அல்லது AirAsia MOVE செயலியின் வழி இந்த சிறப்பு கழிவுக்கான டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
அழகான கடற்கரைகளில் உல்லாசமாக இருக்க விரும்பினால் லங்காவி, கோத்தா கினபாலு,லோம்பொக்,புக்கெட்,நா ட்ராங் போன்ற நாகர்களுக்கு இந்த சிறப்பு கழிவு கட்டணத்தில் சிறகடிக்கலாம். துரித வளர்ச்சி கண்டு வரும் நகர்களை கண்டு களிக்க நீங்கள் விரும்பினால் பேங்காக்,மேடான்,ஹானோய்,பெர்த் போன்ற நகர்களுக்கு சிறப்பு கழிவில் டிக்கெட்டுகளை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் தைப்பே,செங்டு,ஒசாகா,சிட்னி மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட தாஷ்காண்ட், இஸ்தான்புல் போன்ற நகர்களுக்கு சிறப்பு கழிவில் நீங்கள் சிறகடிக்கலாம்.
இது மட்டுமின்றி இருக்கைகள் தேர்வில் கூடுதல் 24 விழுக்காடு கழிவை ஏர் ஆசியா வழங்குகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular