Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மகா சிவராத்திரி தினமான இன்றுடன் கும்பமேளா நிறைவு – சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு!

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெறுகிறது. இதையடுத்து கும்ப மேளா நிறைவு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஏராளமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் வருகை தந்த நிலையில், அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பொது மக்கள், பக்தர்களுடன் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular