Friday, November 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கேமரன் மலையில் நன்கொடைப் பொருட்கள் மற்றும் நாற்காலிகள் வழங்கப்பட்ட “Cahaya Kasih Deepavali” தீபாவளி நலத்திட்ட தொடக்கம்!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தானா ராதா சட்டமன்ற உறுப்பினர் ஹோ சி யாங், மன்ற உறுப்பினர் தேவின் அவர்களுடன் இணைந்து, கேமரன் மலையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, குறைந்த வருமானம் கொண்ட 150 இந்தியக் குடும்பங்களுக்கு நன்கொடைப் பொருட்களை வழங்கும் “Cahaya Kasih Deepavali” திட்டத்தை அண்மையில் தொடக்கி வைத்தனர். இந்நிகழ்வின் மூலம், குடும்பங்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இந்தியச் சமூகத்தின் மீதான தங்களது அக்கறையையும் வெளிப்படுத்தினர்.

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நன்கொடைப் பொருட்களை வழங்கியதுடன், இந்தியச் சமூகத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் வழிபாட்டுத் தலங்களின் தேவைகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில், ஹோ சி யாங் மற்றும் அவரது குழுவினர் 150 நாற்காலிகளையும் நன்கொடையாக வழங்கினர்.

அவற்றில், 50 நாற்காலிகள் உள்ளூர் சமூகப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டன. மீதமுள்ள 100 நாற்காலிகள், குவாலா தெர்லாவில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் இந்து ஆலயத்திற்கு வழங்கப்பட்டன. இவை ஆலயத்தில் நடைபெறும் சமய மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்குப் பயன்படும்.

“Cahaya Kasih Deepavali” திட்டம் என்பது ஒரு பண்டிகைக் கால நிகழ்ச்சி மட்டுமல்ல. அனைத்து இன மக்களின் தேவைகளையும் அறிந்து, மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்து, அவர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதற்கான எங்கள் குழுவின் உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது. தொடர்ந்து மக்களைச் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, எங்களால் இயன்ற உதவிகளை வழங்குவோம்.

இரண்டு இந்து ஆலயங்களின் பராமரிப்புப் பணிகளுக்கு RM320,000 நிதி ஒதுக்கீடு

கேமரன் மலையில் அமைந்துள்ள இரண்டு இந்து ஆலயங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக மொத்தம் RM320,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தானா ராதாவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு RM220,000-மும், பிரிஞ்சாங்கில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்திற்கு RM100,000-மும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கலாசாரப் பன்முகத்தன்மையைப் பாதுகாத்து, அனைத்து இன மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்போம்.

DAP கேமரன் மலை சேவைக் குழு தொடர்ந்து மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து, குடியிருப்பாளர்களின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொள்ளும் பணியை முன்னெடுக்கும்.

கல்வி, சமயம், கலாசாரம் மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி, தேவையான உதவிகளை வழங்குவதன் மூலம், ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த, அனைவரையும் உள்ளடக்கிய சிறந்த கேமரன் மலையை உருவாக்குவதே எங்களது நோக்கமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular