
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, AirAsia விமான நிறுவனம் லங்காவி, பாலி, அகமதாபாத், அமிர்தசரஸ், திருவனந்தபுரம், மாலத்தீவு, சியோல், மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சிறப்புக் கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கும், பண்டிகைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்கும் பயணிகளுக்கு இந்தச் சலுகைகள் உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு மற்றும் பயணக் காலம்
இந்தச் சிறப்புக் கட்டணங்களுக்கான முன்பதிவு 2026 அக்டோபர் 26 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும்.
பயணக் காலம் பின்வருமாறு:
- அகமதாபாத்: 2026 அக்டோபர் 25 முதல் 2027 செப்டம்பர் 30 வரை.
- அமிர்தசரஸ்: 2026 டிசம்பர் 2 முதல் 2027 செப்டம்பர் 30 வரை.
- மற்ற வழித்தடங்கள்: 2026 நவம்பர் 2 முதல் 2027 செப்டம்பர் 30 வரை.
இந்தச் சிறப்புக் கட்டணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானச் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். பயணிகள் AirAsia MOVE செயலி அல்லது www.airasia.com இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம்.
கூடுதல் பயணச் சலுகைகள்
பயணத் திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய சூழலில், தகுந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருமுறை மாற்றக் கட்டண விலக்கு வழங்கப்படும். இதற்கு செயலாக்கக் கட்டணமும் வசூலிக்கப்படாது; எனினும் கட்டண வேறுபாடு இருந்தால் அது பொருந்தும்.
மேலும், AirAsia MOVE செயலி மூலம் ஆரம்ப விமான முன்பதிவின்போதே Value Pack வாங்குவோருக்கு, கிடைக்கும் இருப்புக்கு ஏற்ப 30 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த Value Pack மூலம் பதிவு செய்யப்பட்ட பயணப் பொதிகள், உணவு, இருக்கைத் தேர்வு உள்ளிட்ட கூடுதல் பயண வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

முகன் ராவ் பங்கேற்கும் தீபாவளி இசைக் காணொளி
தீபாவளியின் மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்திருப்பதன் மகத்துவத்தைக் கொண்டாடும் வகையில், பாடகரும் நடிகருமான முகன் ராவ் இடம்பெறும் பிரத்யேக தீபாவளி இசைக் காணொளியையும் AirAsia வெளியிட்டுள்ளது.
“Atti Deepavali | Mugen Rao x AirAsia” என்ற தலைப்பிலான அந்த இசைக் காணொளியை YouTube தளத்தில் பார்க்கலாம்.
அன்பு, மகிழ்ச்சி மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் இனிய தருணங்கள் நிறைந்த ஒளிமயமான தீபாவளியாக அனைவருக்கும் அமைய வேண்டும் என்று AirAsia வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

குறிப்பு: அறிவிக்கப்பட்ட சிறப்புக் கட்டணங்களில் பயணிகள் சேவைக் கட்டணம், ஒழுங்குமுறைச் சேவைக் கட்டணங்கள், எரிபொருள் கூடுதல் கட்டணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற கட்டணங்கள் அடங்கும். சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும். Value Pack சலுகை ஆரம்ப விமான முன்பதிவின்போது AirAsia MOVE செயலி வழியாக வாங்கும்போது மட்டுமே கிடைக்கும்; இருப்பைப் பொறுத்தது.


