Thursday, October 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தெரேசா கோக் அவதூறு வழக்கு: அக்மால் சாலேவுக்கு RM300,000 அபராதம் — அம்னோவுக்கு இது ஒரு பாடமாக அமையுமா?

கோலாலம்பூர்,அக் 22

மலாக்கா உயர்நீதிமன்றம் (19 அக்டோபர் 2026) அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமது அக்மால் சாலே, செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் சு சிம் க்கு அவதூறு இழப்பீடாக RM 250, 000 மற்றும் சட்டச் செலவாக RM 50,000 செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை நீதிபதி டத்தோ இசா அசீஸ் இப்ராஹிம் வழங்கினார். மேலும், தீர்ப்பு வழங்கப்பட்டபோது இந்தத் தீர்ப்பில் அக்மால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் குறிப்புடத்தக்கது!

வழக்கின் பின்னணி அரசாங்கத்தின் ஹலால் சான்றிதழ் கட்டாயமாகும். யோசனை குறித்து சர்ச்சை 2024 செப்டம்பர் 7 அன்று டிக்டாக்கில் பதிவிட்ட காணொளியில் தெரேசா கோக் இஸ்லாமிய விவகாரங்களில் தலையிடக்கூடாது எனக் கூறி, அவரை “Old Nony” என அக்மால் விமர்சித்தார் இதுவே அவதூறு வழக்கிற்கு அடிப்படையானது.
தீர்ப்பில், அக்மால் தனது சமூக ஊடக கணக்குகளில் இருந்து அவதூறு கருத்துக்களை 7 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும். இனிமேல் தெரேசா கோக் குறித்து அவதூறு கருத்துக்களை மீண்டும் வெளியிடக் கூடாது என்றும் நீதிமன்றம் தடை விதித்தது.

தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் முகநூலில் (facebook) பதிவிட்ட அக்மால் சாலே பதவி விலக மாட்டேன் “நான் பதவி விலகுவதா? அதற்கு வாய்ப்பே இல்லை (Absolutely not)” என சவால் விட்டார். நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ அதை செய்யுங்கள் என்னைப் பொறுத்தவரை பதவி விலகுவது என்பது முற்றிலும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த தீர்ப்பு அக்மால் சலோவிற்கு மட்டுமல்ல, அம்னோவுக்கு (UMNO) ஒரு பாடமாக அமைய வேண்டும். அரசியல் மேடையில் இனமத உணர்வுகளை தூண்டும் பேச்சுக்கள் வாக்குக்குகளை குவிக்கலாம், ஆனால் நீதிமன்றத்தில் அதற்கு விலை உண்டு – இம்முறை அக்மால் சலோவிற்கு RM 300, 000.00 தெரேசா கோக் தரப்பு “நீதி நிலை நாட்டப்பட்டது” எனக் கூறுகிறது. அம்னோ (UMNO) இளைஞர் அணி தலைவர் இனி சமூக ஊடகத்தில் “வீர வசனம்” பேசும் முன் சட்டத்தின் எல்லையை நினைவில் கொள்ள வேண்டும் பொறுப்பற்ற பேச்சு கட்சிக்கு பெருமை சேர்க்காது. மாறாக நிதி இழப்பீட்டையும் நற்பெயர் சேதத்தையும் தான் கொண்டு வரும்.
இந்த RM 300,000.00 தீர்ப்பு , அம்னோவுக்கு உண்மையிலேயே பாடமா ? இல்லை அடுத்த சர்ச்சைக்கான தொடக்கமா ?பொறுத்திருந்து பார்ப்போம்!

“இந்தத் தீர்ப்பை ஓர் தனிநபருக்கான நீதிமன்றத் தீர்ப்பாக மட்டும் பார்க்கக் கூடாது. அரசியலில் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்புண்டு. பிறரின் நற்பெயருக்கு மதிப்பளிக்கும் கடமையை அரசியல் தலைவர்கள் உணர வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் பேசுவதற்கான உரிமையல்ல; அது சட்டத்திற்கும் பொறுப்புணர்வுக்கும் உட்பட்டது. சட்டத்தின் வரம்புகளை மதித்து நடப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை” என்று மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா” ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular