Thursday, October 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கம்போங் குடாங் காராமில் மகிழ்ச்சியளிக்கும் மற்றுமொரு முன்னேற்றம்!

செகாமட், அக் 22

இம்முறை கம்போங் குடாங் காராம் கிராம மேம்பாட்டு மற்றும் பாதுகாப்பு குழுவான
(JPPK) முன்னேடுத்துள்ள
Sejati MADANI தங்கும் விடுதி குடில்களை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.
கிராம மக்கள் தங்களின் நலனைக் கருத்தில் கொள்வதோடு மட்டுமல்லாமல், சுயமாக வருமானம் ஈட்டுவதற்கான வழிகளையும் தேடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய கிராமத் தலைவர் மற்றும் JPKK குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

SejaTi MADANI என்றால் என்ன என்று சிலர் கேட்கலாம்.

SejaTi MADANI என்பது Program Sejahtera Komuniti MADANI என்பதன் சுருக்கமாகும். இது மத்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். அந்தந்தப் பகுதிகளின் ஆற்றல் மற்றும் வாய்ப்புகளுக்கு ஏற்ப, உள்ளூர் சமூகங்கள் பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்த இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், தகுதிபெறும் சமூகங்களுக்கு விவசாயம், சேவைகள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் திட்டங்களை முன்னெடுக்க அதிகபட்சமாக RM100,000 வரை மானியம் வழங்கப்படலாம்.

கம்போங் குடாங் காராமில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கும் விடுதிக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதி சுற்றுலாப் பயணிகளையும் பார்வையாளர்களையும் ஈர்த்து, புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதுடன், JPKK குழுவுக்குத் தொடர்ச்சியான வருமானத்தையும் பெற்றுத் தரும் என நம்புகிறேன். அந்த வருமானம் மீண்டும் கிராமத்தின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

கிராம மக்கள் தங்களது கிராமத்தின் தேவைகளையும் திறன்களையும் அடிப்படையாகக் கொண்டு, தாங்களாகவே திட்டமிட்டு செயல்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதில்தான் இத்திட்டத்தின் சிறப்பு உள்ளது என நான் கருதுகிறேன். இது வெறும் உதவியைப் பெறுவதுடன் முடிந்துவிடாமல், நீண்டகாலத்திற்கான வருமான ஆதாரத்தை உருவாக்கும் முயற்சியாகும்.

கிராமப்புற சமூகங்களுக்கு இத்தகைய வாய்ப்புகளை வழங்கும் SejaTi MADANI திட்டத்தை அறிமுகப்படுத்திய மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (PMX) அவர்களுக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை, கம்போங் குடாங் காராம் JPKK குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இந்தத் தங்கும் விடுதிக் குடில்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, கிராம மக்கள் அனைவருக்கும் நன்மைகளைப் பெற்றுத் தரட்டும் என அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular