Thursday, October 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

செகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் நலத் திட்டம்: கம்போங் குடாங் காராமில் சிறப்பாக நடைபெற்ற ஜாலினான் மெஸ்ரா நிகழ்ச்சி!

கம்போங் குடாங் காராமில் உள்ள டத்தாரான் காசிஹ் பகுதியில், செகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் ஜாலினான் மெஸ்ரா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கிராம மக்கள் அதிகாலையிலிருந்தே திரண்டதால் அப்பகுதி களைகட்டியது.

இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து, கிராம மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் நலன்களை விசாரித்து, உறவை வலுப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது தாம் மகிழ்ச்சி அடைவதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.

இத்தகைய சந்திப்புகள் வெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மட்டுமல்ல. மக்களின் குரல்களையும், அவர்களின் உண்மையான தேவைகளையும் நேரடியாகக் கேட்டறிவதற்கான முக்கியமான வாய்ப்புகளாகும்.

இந்த நிகழ்ச்சியின்போது, கிராமத் தலைவரால் அடையாளம் காணப்பட்ட தனித்து வாழும் தாய்மார்கள், அஸ்னாஃப் எனப்படும் உதவி தேவைப்படும் ஏழை மக்கள் மற்றும் B40 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு 45 உணவுப் பொருள் கூடைகள் வழங்கப்பட்டன. இந்த உதவிகள், பயனாளிகளின் அன்றாடச் சுமையைக் குறைக்க ஓரளவாவது துணையாக இருக்கும் என நம்புகிறேன்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, எனது அலுவலகப் பணியாளர்களின் உதவியுடன் செகாமாட் நாடாளுமன்ற அலுவலகத்தின் நடமாடும் சேவை மையமும் செயல்பட்டது. இதன் மூலம், பொதுமக்கள் என்னையும் அலுவலகப் பணியாளர்களையும் நேரடியாகச் சந்தித்து, புகார்களைத் தெரிவிக்கவும், உதவி கோரி விண்ணப்பிக்கவும், தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு கருத்தும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அவற்றின் அடிப்படையில் உரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், கம்போங் குடாங் காராமின் JPKK எனப்படும் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுவிற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தேன். கிராமத் தலைவர் மற்றும் JPKK குழுவினர் முன்வைத்துள்ள சில கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை இயன்றவரை மேற்கொள்வேன்.

பொதுமக்களுக்குப் புகார்கள் அல்லது உதவி தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால், செகாமாட் நாடாளுமன்ற அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் உங்களுக்காகத் திறந்தே இருக்கும்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய கெமெரேஹ் வட்டாரத் தலைவர் டோக் ஷஹ்ரிசான், கிராமத் தலைவர் டோக் ஷாம் மற்றும் JPKK குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மாவட்ட தகவல் அதிகாரி திரு. ரஷீத், செகாமாட் முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் சங்கத் தலைவர் கேப்டன் இஸ்மாயில் ஜமில், குடாங் காராம் பள்ளிவாசல் தலைவர் திரு. ஸைத் ஆகியோரின் வருகைக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நம்மிடையே நிலவும் நல்லிணக்க உணர்வும், பரஸ்பர அக்கறையும், நெருக்கமான உறவுகளும் தொடர்ந்து நிலைத்திருக்கட்டும். மக்கள் ஒருவருக்கொருவர் துணையாகவும் அக்கறையுடனும் வாழும் சமூகமே நான் நேசிக்கும் செகாமாட்! என அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular