Tuesday, October 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கேப்டன் ஸ்மித் மச்சார் – உலகமே புகழும் இந்திய வீரன் : உலகத் தலைவர்கள் பாராட்டு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலையும் கடமை உணர்வையும் ஒவ்வொரு இந்தியரும் பெருமையாகக் கருத வேண்டும் என்று பாராட்டியுள்ளார். ரத்தம் வழிந்த நிலையிலும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றப் போராடிய அவர், உண்மையான ஹீரோவும் இந்தியாவின் பெருமைமிகு மகனும் ஆவார் எனப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி காணொளி அழைப்பு மூலம் நேரடியாகப் பேசினார். அப்போது, கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசாத்திய துணிச்சலையும், 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அவரது வீரத்தையும் பிரதமர் மோடி மனதாரப் பாராட்டினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , இஸ்ரேல் மக்கள் சார்பாக கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் 100-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் நாட்டுப் பயணிகள் ஆவர். அவர்களைக் காப்பாற்றியதன் மூலம், கேப்டன் ஸ்மித் மச்சார் இன்று இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான  நட்பின் அடையாளமாக மாறியுள்ளார் என்றார் அவர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  ஒரு உண்மையான அமெரிக்கன் ஹீரோ மாதிரி போராடியிருக்கிறார் ஸ்மித் உலகத்துக்கே அவர் ஒரு பாடம் ஈரான் தொடர்பு இருக்கா என விசாரிக்கின்றோம் என தெரிவித்தார்.

“ஒருவேளை விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தால்?” யாருக்கு தெரியாமல் போயிருந்தால் துணை விமானி விமானத்தை 2 நிமிடத்தில் 34,000 அடியில் இருந்து 18,000 அடிக்கு கொண்டு வந்துவிட்டார் .

இன்னும் 30 வினாடி கிடைத்திருந்தால் தரையில் மோதி 180  பேரும் இறந்து இருப்பார்கள்.

விமானம் கோளாறு தொழில்நுட்ப பிரச்சனை செய்து வந்திருக்கும்.

இந்தியாவிற்கு கெட்ட பெயர் வந்திருக்கும்.

கேப்டன் இந்தியன் விமான துபாய் இஸ்ரேலியர்கள்  இறப்பு .

“இந்திய விமானியின் தவறால் விமானம் விபத்துக்குள்ளானது” என்ற தலைப்புச் செய்தி வந்திருக்கும்.

உலக அரங்கில் இந்திய விமானிகள் மேல் நம்பிக்கை போயிருக்கும்.

இஸ்ரேல், அமெரிக்கா   மற்றும்  இந்திய உறவு பாதிக்கப்பட்டிருக்கும்.

உண்மை வெளியே வராமல் போயிருக்கும்.

“கேப்டன் இறந்திருந்தால், துணை விமானியோடு சதியாளர்களான பயங்கரவாதிகள்  ஜெயித்திருப்பார்கள்.

கேப்டன் ஸ்மித் எப்படி இந்தியாவின் பெயரைக் காப்பாற்றியிருப்பார்!

 கை, கால் கடுமையாக  காயமடைந்த  நிலையிலும், தனது கடமையை உணர்ந்து கடுமையாகப் போராடியிருக்கிறார்.

அவசர முடிவு காக்பிட் கதவை திறந்து பயணிகளை உள்ளே விட்டார் 180 உயிர் முக்கியம் என்று முடிவெடுத்தார்.

ஆதாரம் விட்டு விட்டுப் போனார் 7500 , 7700 எமர்ஜென்சி கோட் அனுப்பினார் இதனால் தான் உலகம் முழுவதும் உஷார் ஆகி

போர் விமானங்களை தயார் நிலைப்படுத்தப்பட்டது.

உயிரோட இருந்தார் அவர், உயிரோட துணை விமானி குத்தினதும் உண்மை வெளியே  வந்தது இல்லன்னா கேப்டன் நட்புன்னு முடிஞ்சிருக்கும்.

இன்று நிலைமை

கேப்டன் ஸ்மித் சவுதி  மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் உள்ளார்.

இந்திய பெருமை – இந்திய மகன் இந்திய வீரன் என்று உலகம் மீடியா எழுதியது.

இந்தப் பாடம் ஒரு ஆளோட துணிச்சல் ஒரு நாட்டோட மானத்தையே காப்பாற்றியது.

அவசர முடிவு காக்பிட் கதவை திறந்து பயணிகளை உள்ளே விட்டார் இது விதிமீறல் ஆனால் 180  உயிர் முக்கியம் என்று போராடினார்.

ஆதாரம் விட்டுவிட்டு போனார். உயிரோடு இருந்தார் அவர் உயிரோடு இருந்தால் தான் துணை விமானி கூறியதால், ஆயுதத்தால் தாக்கிய உண்மை வெளிவந்தது. இல்லையென்றால், கேப்டனின் தவறு என்று முடிந்திருக்கும்.

கடைசியில், கேப்டன் ஸ்மித் செய்தது வெறும் விமானம் ஓட்டும் வேலை மட்டுமல்ல. 180 குடும்பங்கள், இந்தியாவின் பெயர், இஸ்ரேல் –இந்தியா நட்பு எல்லாவற்றையும் காப்பாற்றிவிட்டார். அதனால் தான் உலகமே அவரை “Real Hero” என்று கொண்டாடுகிறார்கள்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் உள்ள சையத் ராணுவ மருத்துவமனையில் (Zayed Military Hospital) சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் கேப்டன் ஸ்மித்திடம் அண்மையில் அந்த நேர்காணலின்போது ஸ்மித் கூறியதாவது,

துணை விமானி பிரார்த்தனை செய்ய விரும்பியதால் எழுந்து நின்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். நான் இயக்கும் விமானம் போயிங் 737. அந்த விமானத்தின் காக்பிட் (விமானி அறை) மிகவும் பெரியது அல்ல, எனவே ஒருவர் பிரார்த்தனை செய்யும்போது, அவருடைய தனிப்பட்ட வழிபாட்டுக்கு மரியாதை அளிக்கும் வகையில், நான் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

நான் எனது பணியில் ஈடுபட்டிருந்தேன். இருக்கையில் அமர்ந்தபடி, விமானத்தின் நேரம் மற்றும் பிற விவரங்களைச் சரிபார்ப்பதற்காக எனது கணினியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது தலையின் பின்பகுதியில் பலமாக ஓர் அடி விழுந்தது.

அந்த அடி மிகவும் பலமாக இருந்தது. ஏதோ மிகவும் வலிமையான, கடினமான பொருளால் தாக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த நேரத்தில் என்ன பொருளால் என்னைத் தாக்கினார் என்று எனக்குத் தெரியவில்லை.

அதன்பிறகு நடந்த சம்பவங்களின்போது, நான் அடிக்கடி சுயநினைவை இழந்து, பின்னர் மீண்டும் சுயநினைவு பெற்றுக்கொண்டிருந்தேன். என கேப்டன் ஸ்மித் மச்சாரி கூறினார்.

  • நடுவானில் நீங்கள் சிந்திய ரத்தம்,
  • ஒவ்வொரு துளியும் பாரதத்தின்!
  • மானத்தை காத்தது உலக அரங்கில்,
  • “இந்தியன்” என்ற பெயருக்கு பெருமையை சேர்த்தீர்!

நீங்கள் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் வானில் சிறகடிக்க 140 கோடி மக்களும் பிரார்த்திக்கின்றோம்.

அவரது துணிச்சலும் தியாக உணர்வும் மனித உயிர்களின் மதிப்பையும், இக்கட்டான சூழ்நிலையிலும் கடமையை உணர்ந்து செயல்படுவதன் அவசியத்தையும் உலகிற்கு உணர்த்துகின்றன.

அவரது வீரத்தையும் மனிதநேயத்தையும் போற்றும் வகையில், மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், ‘அலை ஓசை மீடியா’ ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு அவர்கள் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

“வீரம் என்பது அச்சமின்மை மட்டுமல்ல; ஆபத்தான தருணத்திலும் உயிர்களைக் காக்கும் கடமை உணர்வே உண்மையான வீரம்!”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular