Tuesday, October 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவின் வண்ணங்கள்: இந்தியச் சமூகத்தின் கலாசாரத்தைப் போற்றுவோம், தொழில்முனைவோரை வலுப்படுத்துவோம்

ஜொகூர் பாரு அக் 14
கடந்த அக்டோபர் 7 முதல் அக்டோபர் 11 ஆம் தேதி முறை ஜொகூர் பாரு சூத்ரா மாலில் நடைபெற்ற South East Asia Deepavali Expo & Trade Expo-Colours of India நிகழ்வின் நிறைவு விழாவை சிறப்பித்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.

விழா முழுவதும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 250க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பொருட்கள், சுவையான உணவுகள் மற்றும் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

என்னைப் பொறுத்தவரை, இந்நிகழ்வு வெறும் வணிகக் கண்காட்சியோடு நின்றுவிடவில்லை. குறிப்பாக, சிறு வணிகர்கள் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், வணிகத் தொடர்புகளை உருவாக்கவும், தங்களது சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இது ஒரு சிறந்த தளமாக அமைந்தது.

குறிப்பாக, பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தாக்கல் செய்த 2027ஆம் ஆண்டுக்கான MADANI வரவு செலவுத் திட்டம் , இந்தியச் சமூகத்தினருக்கும் பல்வேறு நற்செய்திகளைக் கொண்டுவந்துள்ளது.

அவற்றில் ஒன்றாக, இந்தியத் தொழில்முனைவோர் தங்களது வணிகத்தை விரிவுபடுத்த உதவும் வகையில், TEKUN Nasional மற்றும் Amanah Ikhtiar Malaysia (AIM) ஆகிய அமைப்புகள் வாயிலாக RM150 மில்லியன் நிதியுதவி வசதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், MITRA அமைப்புக்கு RM150 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்திய இளைஞர்களுக்குத் தொழில்நுட்பம், தொழில்துறைத் தானியக்கம் மற்றும் விமானப் பராமரிப்பு ஆகிய துறைகளில் திறன் பயிற்சிகளையும் வேலைவாய்ப்புகளையும் வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

மேலும், தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்ப்பள்ளிகளின் (SJKT) பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக RM50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்புகளை, குறிப்பாக இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில்முனைவோரும் இளைஞர்களும் தங்களது தகுதிக்கேற்ப முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதிகமானோர் தற்சார்புடன் வளர்ந்து, வருமானத்தை உயர்த்தி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.

Colours of Indiaநிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து வளர்ந்து, நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், பாரம்பரியக் கலாசாரத்தைப் பாதுகாக்கவும், பல்வேறு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தவும் துணைபுரியட்டும்! இதுபோன்று முயற்சிகள் தொடர்ந்து வளர்ந்து நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கவும் பல்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவோம் துணை புரியும் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular