Friday, October 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

எதிர் வரும் மலாக்கா சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பெர்சாத்து தலைவருடன் ராமசாமி பேச்சு!

கோலாலம்பூர் அக் 13
விரைவில் நடைபெறவருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுடன் உரிமை கட்சியின் தலைவர் டாக்டர்
பி. ராமசாமி பேச்சு வார்த்தை நடத்தினார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மலாக்கா சட்டமன்ற தேர்தலில்
அம்னோ-பாஸ் அரசியல் கூட்டணியை முறியடிக்க, பெர்சாத்து தனது கொள்கைகளுக்கு உடன்பட்ட ஒரு அரசியல் கூட்டணியை தயார் செய்து வருவதாக பேராசிரியர் ராமசாமி கூறினார்.


இந்தக் கூட்டணி குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் செய்யப்படாத போதிலும், மலேசிய அரசியல் களத்தில் பெர்சாத்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநில தேர்தலில் உரிமை கட்சி போட்டியிடுமா? என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றார் அவர்.
இருப்பினும்
தேமு-பாஸ் அரசியல் கூட்டணியை முறியடிக்க பெர்சாத்துவுடன் இணைந்து உரிமை போராடும் என அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் உரிமை கட்சியின் பொறுப்பாளர்கள் சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல் மற்றும் அக்கட்சியின் பிரபல வழக்கறிஞரும் கலந்து கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular