Thursday, May 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாஸ் தலைமைத்துவத்தின் அனைத்து முடிவுகளையும் ஆதரிப்போம்!

பாஸ் தலைமைத்துவம் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் பாஸ் ஆதரவு பேரவை முழுமையாக ஆதரிக்கும் என அதன் தலைவர் குமரேசன் கூறினார்.
அரசியல் நிலைத்தன்மை, மக்களின் ஒற்றுமை மற்றும் நாட்டின் எதிர்கால நலன் அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் பாஸ் தலைவர் ஹாடி அவாங் தலைமையிலான பாஸ் கட்சி செயல் பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாடு மற்றும் மக்களின் நலனை கருதி தான் பாஸ் தலைமைத்துவம் அரசியல் முதிர்ச்சி தன்மையுடன் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நல்லிணக்கம், நிலைத்தன்மை மற்றும் மக்களின் ஒற்றுமை தொடர்பான தகவல்களை கட்சியின் தலைமைத்துவத்திற்கு கொண்டு செல்லும் ஒரு பாலமாக பாஸ் ஆதரவு பேரவை செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனல் பங்காளி கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும், தனது நிலைப்பாட்டில் பாஸ் கட்சி உறுதியாக இருக்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.
ஆகையால் பாஸ் தலைமைத்துவம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பாஸ் ஆதரவு பேரவை தனது பிளவு படாத ஆதரவை தந்து வரும் என்றார் அவர்.
கட்சியின் தலைமைத்துவத்திற்கு பாஸ் ஆதரவு பேரவை தொடர்ந்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி வரும் என அவர் உறுதியளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular