Friday, November 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பேராசையால் வந்த விளைவா? டாக்டர் இப்ராஹிம் விவகாரம் மக்களுக்கு ஒரு பாடமா?

கோலாலம்பூர், நவ 27

அண்மையில் ஹாதர் இப்ராஹிம் விவகாரம் தொடர்பாக டத்தோ சண்முகம் அவர்கள் முக்கிய காணொளி மூலம் விளக்கம் அளித்த தகவல்.
1.அலுவலகத்திற்கு கூப்பிட்டு திட்டாதீர்கள்!
நிறைய பேர் அலுவலகத்திற்கு கூப்பிட்டு நாங்கள் காசை வாங்கியது இதை செய்யாதீர்கள் நங்கள் உங்களுக்கு உதவுவதற்கு தான் இந்த விஷயத்தை ஏற்படும் செய்துள்ளோம்.
இனி எதுவாக இருந்தாலும் தொலைபேசி அழைப்பில் பேச வேண்டாம். எல்லாம் புலனம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று ஆவணப்படுத்தல் ஆதாரம் இருக்க வேண்டும் அதுதான் எல்லோருக்கும் பாதுகாப்பு.

காசை எடுத்து என்ன செய்தார்?

அவருடைய பதிவுகளை (Records) பார்க்கும் போது அவர் ஏற்கனவே 5 (Incorporated Company) கம்பெனிகளை சட்டப்படி பதிவு செய்துள்ளார், அதில் 1 கம்பெனி கலைக்கப்பட்டுவிட்டது (Dissolved) மற்ற 4 கம்பெனிகளும் தற்காலிகமாகச் செயல்படாமல் இருப்பது (Dormant) அதாவது செயல்பாட்டில் இல்லை.

ஒரு கம்பெனியில் 5 லட்சம், ஒரு கம்பெனியில் 2 மில்லியன், ஒரு கம்பெனியில் 900, 000,00 முதலீடு செய்துள்ளார், ஆனால் இன்று அந்த கம்பெனிகளில் பணம் எதுவும் இல்லை.

இப்படி கணக்கு பார்க்கும் போது சுமார் ஐந்து மில்லியன் வட்டி (Interest) வந்துள்ளது. 2012 தொடக்கம் 2013ல் ஆரம்பித்த இந்த கடன் வட்டியுடன் சேர்ந்து இன்று 10 மில்லியன் ஆக வந்துள்ளது. திரும்ப பெறுதல் (Return) மற்றும் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிய கடன் வாங்கியதாக அவர் கூறியுள்ளார்.

அவர் மீது நீதிமன்றத்தில் மொத்தம் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் இரண்டு வழக்குகள் தொடர்பாக வங்கிகள் அவரது சொத்துகளை ஏலத்தில் விற்பனை (Bank auctioned the properties) செய்துவிட்டது.

மீதமுள்ள 44 வழக்குகளும் தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் நீதிமன்றத் தீர்ப்பு (Judgment) எடுத்துள்ளனர்.
ஒரு சிலர் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளனர். இன்னும் சிலர் இதுவரை தாக்கல் செய்யவில்லை.

அவர் இப்போது திவாலாகிவிட்டார்! காசுகொடுக்காதீர்கள்!
இன்றைய சூழ்நிலையில் அவர் சட்டப்படி யாரிடமும் பணம் வாங்க முடியாது . யாரிடமாவது பணம் பெற வேண்டுமானால், முதலில் திவால்துறையிடம் அனுமதி (Insolvency Approval) பெற வேண்டும்.

அவர் கூப்பிட்டு யாரிடமும் கேட்டாலும் தயவு செய்து பணம் கொடுக்காதீர்கள் என்றார், அதே சமயம் அவரை மிரட்டியும் பணம் கேட்காதீர்கள், ஏற்கனவே மிரட்டலால் அவர் பலரிடம் பணம் வாங்கி கடனைக் கட்டியுள்ளார்.

அவர் இப்பொழுது சொந்த நிறுவனத்தில் வியாபாரம் செய்கிறார். அந்த வருமானத்தை வைத்து கட்ட முயற்சி செய்வதாக கூறினார். ஆனால் திவாலானவர் (Bankrupt) என்பதால் அவர் நேரடியாக பணம் கொடுக்க முடியாது. எதுவாக இருந்தாலும் திவால் துறையின் அனுமதியுடன்தான் பணத்தைச் செலுத்த முடியும்.

காவல்துறையிடம் முறைப்படி புகார் செய்துள்ளனர். அவரும் தான் அடிவாங்கியதாக காவல்துறையிடம் புகார் செய்துள்ளார். ஏற்கனவே ஒரு காணொளியில் ஒரு பெண் அவரை அறைந்ததாகக் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் மீண்டும் புதிய தகவல் (Update) தருவதாக கடைசியாக டத்தோ சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஹாதர் இப்ராஹிம் விவகாரம் பற்றி இப்பொழுது மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. சிலர் கூறுகிறார்கள் அவர் தன்னுடைய வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டாமல், மற்றவர்களுடைய வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்ட முயன்றதாக கூறப்படுகின்றது. பேராசை, வியாபாரம், பணம் பெருகும் என்ற ஆசை இவற்றால் தான் இந்த நிலைமை வந்ததாக சிலர் கருதுகின்றனர். பேராசைப்பட்டு தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி, மற்றவர்கள் பணத்தில் வாழ நினைத்தால், கடைசியில் என்ன ஆகும். என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக பேசப்படுகின்றது.

பேராசை வியாபாரம் என்ற போர்வையில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும், லாபம் வரும், என்று சொல்லப்பட்டதாக மக்கள் கூறுகின்றார்கள் .

ஆனால் உண்மையில் என்ன நடந்தது? ஒருவரிடம் வாங்கிய பணத்தை இன்னொருவருக்கு கொடுத்து, இன்னொருரிடம் வாங்கிய பணத்தை மற்றொருவருக்கு கொடுத்து. இதைத்தான் மக்கள் தபால்காரர் (Postman) வேலை என்று கடுமையாக விமர்சிக்கின்றார்கள் .

இது வியாபாரம் அல்ல. இது பேராசையை வைத்து நடத்தப்பட்ட ஒரு விளையாட்டு என்று மக்கள் கொந்தளிக்கின்றார்கள் .

இன்று யார் கஷ்டப்படுகிறார்கள்? பணம் கொடுத்தவர்கள் இன்று நிம்மதி இழந்து நிற்கின்றார்கள். சிலர் குடும்ப கஷ்டம், சிலர் கடன் தொல்லை, சிலர் மன உளைச்சல்.

ஆனால் இதற்கு காரணம் யார்? பேராசை மட்டும்தான்.
ஒரு மனிதனின் பேராசை பல குடும்பங்களை இன்று நீதிமன்ற வாசலில் நிற்க வைத்துள்ளது, என்று டத்தோ சண்முகம் அவர்கள் கூறிய தகவல்களில் இருந்து தெரிகின்றது.

இது ஒரு பாடம் அல்ல, எச்சரிக்கை! பேராசைப்பட்டவன் கடைசியில் என்ன ஆனான்? திவாலானவர் (Bankrupt) சட்டத்தின் முன் நிற்க வேண்டிய நிலை, யாரிடமும் பணம் வாங்க முடியாத நிலை, சொந்தமாக எதுவும் செய்ய முடியாத நிலை, இதுதான் பேராசையின் முடிவு.

மக்களுக்கு அலையோசை கொடுக்கும் எச்சரிக்கை :-

1.தபால்காரர் (Postman) மாதிரி ஒருவர் பணத்தை வாங்கி இன்னொருவருக்கு கொடுத்து சமாளிக்கும் முறை கடைசியில் எல்லோரையும் நஷ்டத்தில் தள்ளிவிடும்.
2. உங்கள் வருமானத்துக்கு மீறி யாருக்கும் கடன் கொடுக்காதீர்.
3.அதிக லாப ஆசை காட்டும் மோசடி வியாபாரங்களில் ஏமாறாதீர்கள்.”
உழைத்து சாப்பிடுங்கள் உங்கள் வருமானத்திற்கு ஏற்றபடி வாழுங்கள் மற்றவன் பணத்தில் சொகுசாக வாழலாம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள் .
ஏனென்றால், பேராசைக்கு கடைசியில் கிடைப்பது மரியாதை அல்ல, அவமானமும், கடனும், நீதிமன்றமும் தான்.

இனி வரும் காலங்களில் தன்னம்பிக்கைப் பேச்சாளர், தன்முனைப்பு தூண்டுதல், முதலீடு ஆலோசனைகள், மனோதத்துவ ஆலோசகர், ஆன்மிக வழிகாட்டி என்ற பெயரில் பணம் வசூலிப்பவர், கிரிப்டோ முதலீட்டு ஆலோசகர், நேரடி விற்பனை வணிகம், ஆட்களைச் சங்கிலித் தொடராக இணைக்கும் வணிகம் மற்றும் சமூக ஊடகப் பயிற்சியாளர் பணத்தை பல மடங்காக ஆக்கி உங்களுக்கு தருகிறேன், என்ற பெயரில் பேசி பணம் திரட்டுபவர்களிடம் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த வெளியான அறிக்கை எல்லோருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.

இதை சட்டத்துறை கவனத்திற்கு கொண்டு செல்ல பொதுமக்கள் பணத்தை வைத்து தொழில் செய்வதாக கூறி நம்பிக்கை இழக்கச்செய்யும் சம்பவங்கள் அதிகரிப்பதால். இதுபோன்ற தன்முனைப்பு பேச்சாளர்கள் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வன்முறை வேண்டாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே அனைவரின் நிலைப்பாடாக உள்ளது.
இத்தகைய விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்திரத்திற்கும் உணர்ச்சிவசப்பட்ட செயல்களுக்கும் இடமளிக்காமல், மிரட்டல், வன்முறை போன்றவற்றைத் தவிர்த்து, உரிய ஆதாரங்களுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட சட்ட அமைப்புகளை அணுகி சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பணமும் நம்பிக்கையும் பாதுகாக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகள் உரிய கண்காணிப்பையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், அலைஓசை ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular