
அண்மையில் நடைபெற்ற தேசியக் குடியரசு சார்ந்த எழுத்தாளர் பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் 34ஆவது இலக்கியப் பரிசளிப்பு விழா 22 அக்டோபர் 2026 — வியாழக்கிழமை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் அவர்கள் தலைமை வகித்து நிகழ்வைச் சிறப்பித்தார். என்று செய்திகள் தெரிவிக்கின்றன, “இந்நாட்டில் தமிழ் வளர வேண்டும்” என்ற உறுதியோடு நடந்த இவ்விழாவில் படைப்பாளிகள், வாசகர்கள், இளையோர் என பலரும் கலந்து கொண்டு தமிழ் இலக்கியத்துக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த மேடையில் தனித்து ஒளிர்ந்தவர் டத்தோ பா. சகாதேவன் மலேசிய தமிழ் எழுத்தாளர்களை பாராட்டுவது அவரது பெயர் தனி இடம் பெற்றுள்ளது. இந்த நாட்டிலும் எந்த ஒரு இயக்கமோ, அரசியல் கட்சியோ செய்ய முடியாததை, தமிழ் மொழியை வாழ வைக்கும் பணியை டத்தோ பா. சகாதேவன் தனது தொடர் முயற்சியால் மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார் என விழாவில் பேசியவர்கள் பாராட்டினார். தமிழ் இந்த நாட்டின் அழிந்து வரும் சூழலில், அவர் எடுத்த இந்தப் பாதை உண்மையில் ஒரு பெரிய சகாப்தம் போல் அமைந்துள்ளது

விழாவில் தான் ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களின் பங்களிப்பும் நினைவு கூறப்படுகின்றது. அவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அரங்காவலராக செயல்படுகிறார், மேலும் தான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறுகதை, கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஆதரவுடன் தமிழ் இலக்கியத்தை வளர்த்து வருகின்றனர்.
தமிழ்மொழியின் செழுமையையும் இலக்கியத்தின் மேன்மையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் மொழி இலக்கிய அறவாரியம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இளம் எழுத்தாளர்களின் சிந்தனைகளுக்கும் புதுமையான படைப்புகளுக்கும் களம் அமைத்துத் தருவதன் மூலம் அவர்களின் திறமைகள் வெளிச்சம் பெற வழிவகுக்கிறது. இந்த இலக்கியப் பணியின் தொடர்ச்சியாக, டத்தோ பா .சாகாதேவன் அவர்கள் இன்னும் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதே பலரின் ஆவலான எதிர்பார்ப்பாகும்.
அலை ஓசை மீடியா சார்பாக தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் வளர்த்து வரும் இரு தலைவர்களான தான் ஸ்ரீ கே.ஆர். சோமா அவர்களுக்கும், டத்தோ பா.சகாதேவன் அவர்களுக்கும் மலேசிய மண்ணில் தமிழ் ஒளி அணையாமல் காத்து வரும் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மலேசிய மண்ணில் தமிழ் விதைத்த
கை நீங்கள்
அழியும் என்ற அச்சத்தை அழித்த
வேர் நீங்கள்
இயக்கம் செய்யாததை எழுத்தால்
செய்தவர் நீங்கள்
கட்சி தராததை கவிதையால்
தந்தவர்
இந்த நாட்டில் தமிழ் வளர வேண்டும்
என்றாய்
அந்தச் சொல்லை செயலாக்கி
நின்றாய்
பாராட்டு மேடைகள் உன்னைத்
தேடும்
இளைய நெஞ்சங்கள் உன்னால்
வாழும்
சோமாவின் துணையோடு சுடராய்
எறிந்தாய்
தமிழ் அழியாது என்று உலக்குக்குச்
சொன்னாய்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தன்னலமின்றிப் பாடுபடும் இத்தகைய தலைவர்களின் தொண்டு என்றும் போற்றப்பட வேண்டியதாகும். அவர்களின் இலக்கியப் பணிகள் மேலும் சிறந்து, மலேசிய மண்ணில் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் தலைமுறைகள் கடந்து செழித்தோங்கட்டும்! என மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா”வின் ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு அவர்கள், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி வரும் இவ்விரு தலைவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ் வளர்க! தமிழ் இலக்கியம் சிறக்க!
தமிழ் எழுத்தாளர்கள் வாழ்க!


