Thursday, October 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

2026ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமை மன்றத்தின் (MPPN) இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டேன். இக்கூட்டத்திற்குத் துணைப் பிரதமர் மாண்புமிகு டத்தோ அமார் ஹாஜி ஃபதில்லா பின் ஹாஜி யூசோப் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், மதம், இனம் மற்றும் அரச நிறுவனம் தொடர்பான 3R விவகாரங்களைக் கையாளுதல், சமூக மத்தியஸ்த சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டிற்கான தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், தேசியக் கோட்பாடான ருக்குன் நெகாரா மீதான புரிதலையும் ஈடுபாட்டையும் வலுப்படுத்துதல், ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல் ஆகிய முயற்சிகளுக்கும் கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நாட்டின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்துவதில் அனைத்து தொடர்புடைய தரப்பினரும் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவதை உறுதிசெய்வது மிகவும் அவசியமாகும்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் டாகாங், துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular