Monday, October 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்!

கோலாலம்பூர் அக் 16
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் வலியுறுத்தினார்.
தங்கள் தொகுதிகளில் மக்களின் மேம்பாட்டு திட்டங்களுக்கு இது மிக அவசியம் என மக்களவையில் 2027 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
பிரதமர் அறிவித்த ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் கூடுதலாக வெ1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்வதன் தற்போதைய நிலை, அந்த நிதி பதில் அளிக்கப்படும் நடைமுறை மற்றும் அதன் கால அளவு குறித்தும் அரசாங்கம் விளக்கம் தர வேண்டும் என்றார் அவர்.
மேலும் அபிவிருத்தி நிதியை பகிர்ந்து அளிக்கும் போது ஒவ்வொரு தொகுதியின் உண்மையான தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தாம் வலியுறுத்துவதாக அவர் சொன்னார்.
மக்கள் தொகை, உட் கட்டமைப்பின் நிலை, வெல் அபாயங்கள், சுகாதார வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் ஆகியவை இதில் அடங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அனுபவிக்கும் மக்களின் உரிமை அரசியல் வேறுபாடுகளால் தீர்மானிக்க கூடாது.
அனைத்து மலேசியர்களின் நலனுக்காகவும் நியாயமான கொள்கைகளிலும் செயல்களிலும் உண்மையான சீர்திருத்தம் வெளிப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular