
கோலாலம்பூர், அக் 14
அதிக அளவில் தமிழ் மக்கள் வாழும் மலேசிய நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையின் பெயர், அரசாங்க அதிகாரபூர்வப் பதிவுகளில் “தீவாளி” என்று குறிப்பிடப்படுவது தமிழ் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசாங்க விடுமுறை அறிவிப்புகள், நாட்காட்டிகள் மற்றும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகளில் “தீபாவளி” என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக “தீவாளி” என்ற சொல் பயன்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர், இது நாளடைவில் தமிழ்ச்சொல் அளிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எனத் தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

தீபாவளி என்பது தீபம் + ஆவளி அதாவது விளக்குகளின் வரிசை என்ற அர்த்தமுடைய தூய தமிழ்ச்சொல் இதனை “தீவாளி” என்று மாற்றுவது மொழிச்சிதைப்பு.இதை சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள், பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேசங்களுக்கான அமைச்சர் ஹன்னா யோ த்சியோ சுவான் மற்றும் மனிதவள அமைச்சர் Minister of Human Resources) டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது. யாரும் இதற்காக அக்கறை கொண்டு குரல் எழுப்புவதாக தெரியவில்லை, என தமிழ் அமைப்பு ஒன்றின் பிரதிநிதி தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் குடியரசு அமைச்சரும் நாட்டின் பிரதமர் துறையும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்க ஆவணங்களில் அனைத்து இனங்களின் பண்பாட்டுப் பெயர்களையும் அந்த மொழிகளில் சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதே தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பு.

“பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் அடையாளச் சொல்லை மாற்றுவது அந்த இனத்தின் உணர்வுகளை புண்படுத்துவது ஆகும். உடனடியாக “தீவாளி” என்ற சொல்லை நீக்கி “தீபாவளி” என்று அனைத்து அரசாங்க பதிவுகளிலும் திருத்தம் செய்ய வேண்டும் என சமூக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. தமிழ் மக்களின் இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?
இப்படியே போய்க்கொண்டிருந்தால் போலீஸ் புகார், எதிர்ப்புக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகப் பல அமைப்புகள் தெரிவித்தன.
பொதுமக்கள் ஆகிய நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ் வாழ வேண்டும் மலேசிய நாட்டில்
அரசு அறிவிப்பில்“தீவாளி” என்றெழுத்தில் தவறு,
அழகுத் தமிழில் “தீபாவளி” என்றே ஒளிரும் !
தீபம் + ஆவளி சேர்ந்த திருநாள் இது.
திரித்துப்போட்டால் தமிழின் வேர் அறுபடும்.
மலேசிய மண்ணின் மூத்த குடி நாங்கள்
மொழியைக் காத்தால் முன்னேறும் நம் இனம்.
பண்பாட்டின் பெயரைப் பிழையின்றி எழுது.
பல்லின வாழும் நாட்டில் பாசம் தழைக்கும்.
விளக்கொளியைப் போல் வாழ்க தமிழ்.
விண்ணளவு உயர்க மலேசியத் தமிழ்!
தமிழைக் காப்பது தமிழர்களின் கடமை மட்டுமல்ல; மலேசியாவின் மொழிப் பன்மைத்துவத்தையும் பண்பாட்டு நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். இக்கோரிக்கை எவ்வித மோதலையும் உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல; மாறாக, தமிழ்மொழிக்கு உரிய மரியாதையையும் சரியான மொழிப் பயன்பாட்டையும் உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். எனவே, அரசாங்கம் இக்கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புகிறோம் என்று மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா” ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு தெரிவித்தார்.



