Saturday, October 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

குறைந்தபட்ச ஊதிய உயர்வை காரணம் காட்டி பொருட்களின் விலையை உயர்த்த கூடாது-போம்கா எச்சரிக்கை!

பெட்டாலிங் ஜெயா, அக் 12
குறைந்தபட்ச ஊதியம் மாதம் வெ2000 ஆக உயர்த்தப்படுவது சாக்காகக் கொண்டு, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை நியாயமற்ற முறையில் உயர்த்துவதை வணிகர்கள் தவிர்க்க வேண்டும் என மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம்
(FOMCA) எச்சரித்தது.
ஊதிய உயர்வின் பலன்களை அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் பாதிக்காமல் இருப்பதே உறுதி செய்ய, அரசாங்கம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கண்காணிக்க வேண்டும் என போம்கா தலைமை நிர்வாகி டி. சரவணன் கூறினார்.
குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் வெ1,700-லிருந்து
வெ2,000 ஆக உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு போம்கா ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்றார் அவர்.
இருப்பினும், புதிய ஊதிய விகிதம் எந்தெந்த வகை தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு பொருந்தும் என்பதையும், சிறு வணிகங்களுக்கு வழங்கப்படும் விளக்குகளுக்கான தகுதி நிபந்தன்களையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஊதிய செலவுகள் அதிகரிப்பதை காரணமாக கூறி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் நியாயமற்ற முறையில் உயர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தாக்கல் செய்த 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குறைந்தபட்சே ஊதியத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வெ1,700-லிருந்து
வெ2,000 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் 4 மில்லியனுக்கு அதிகமான தொழிலாளர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஆண்டுக்கு
வெ50 மில்லியனுக்கும் குறைவான விற்பனை வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். தங்களது வணிக செயல்பாட்டு முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள அவகாசம் வழங்கும் நோக்கில் இந்த விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular